இயந்திர பொறியாளரின் ரோல்ஸ்ராய்ஸ் காதல் -கார்த்திக்

உனது இமைகளில் அசைவுகள் என்னடி
இருசக்கர வாகனத்தின் சுயதொடக்ககருவியா
நீ என்னைகண்டு கண் இமைக்கிறாய்
என்னுள் காதல் தொடக்கம் ஆகிறது !!!
உனது பற்கள் என்ன பல்சக்கரமா (gear)-அதனோடு
இணைந்த எனது இதயம்தான் உந்துபொறியா
எனது இதயத்தின் வேகம் ஏறுகிறது-நீ
என்னை கண்டு புன்னகைக்கும் பொழுதில் !!!!
வாழ்கையில் ஏற்படும் உராய்வுகெல்லாம்
நித்தமும் நீங்கா நினது எண்ணங்களே
உராய்வை குறைக்கும் மசகுபொருளானதடி
பிசகுகள் எல்லாம் மெல்ல மறையுதடி !!!!
தனியாக ரோல்ஸ்ராய்ஸ் மகிழுந்தில்
யாருமற்ற தேசிய பெருவழி சாலையில் -வானத்து
சிறுதூரலில் ,செய்திடும் விலையுர்ந்த
பயணமாகும்,என் வாழ்வில் நீ வந்தால் !!!!
பொருள் :
சுய தொடக்க கருவி -self starter
உந்துபொறி -car engine
மசகுபொருள் -lubrication
********சும்மா ஒரு முயற்சி ********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்