வாசித்து பார்

உனக்காய் தானடா..!
என் வரிகள் தருகிறேன் - வாசித்துப்பார்..!
முடிந்தால் சில நொடி வாழ்ந்தும் பார்..!


ஏனடா..,!

யாரிடம் கற்றுக்கொண்டாய்
எனை சில நொடியும் நினைக்காதிருக்க ..!

எப்படி ஒப்புக்கொண்டாய்
என்னிலிருந்து தள்ளிநிற்க..!

எங்கே தெரிந்து கொண்டாய்
உனக்கும்எனக்கும் பிரச்சனையை வளர்க்க..!



எங்கே இருக்கிறாயடா நீ ..!

என் நினைவில் என்றால்
மறந்து போய்விடு..!

என் கனவில் என்றால்
களைந்து போய்விடு..!

எனது நிழலில் என்றால்
என் உடன்வருவதை நிறுத்திவிடு..!

காற்றில் என்றால்
என்னை உரசாமல் சென்று விடு..!

என் சுவாசமானால்
என்னை தனியே விட்டுச் சென்று விடு..!


இருப்பினும்..,

இன்று மட்டுமல்ல - என்றும்

நீ வாசிக்க தான்
என் கவிதையை வடிக்கிறேன்







அப்படியே
என் கண்ணீரையும் தான்..!







ஊஊம்ம்ம்ம்ம் எனக்கு கவிதை எழுத தெரியலையே ஹ்ம்ம்ம்ம்ம்

எழுதியவர் : ஜென்னி (7-Dec-13, 4:24 pm)
Tanglish : vaasithu paar
பார்வை : 141

மேலே