உறவு உண்மை
உறவு உண்மை
“உன் மடியில்
படுத்து நான்
உறங்கியிருக்கின்றேன்!
என் மடியில்
படுத்து நீ
உறங்கியிருக்கின்றாய்!
உறக்கம் வராமலும்
உறங்குவதுபோல்
பாவனை செய்திருக்கின்றோம்!
உண்மையான உறவின்
மடியில் உறங்குகையில்
உறக்கம் தானாய்வருமென்ற
உண்மையை உண்மையாக்குவதற்கே!”