என் பாவங்கள் ....!!!!



என் பாவங்கள்
என்னை பின்தொடர்கையில்
நான் செய்த புண்ணியங்கள்
எங்கோ ஒளிந்துகொள்கின்றன

ஒளிந்துகொண்டு
மூன்று வயது
பிள்ளையென
முறுவலிக்கிறது

பாவங்கள்
என் கழுத்தை நெரிக்கையில்
ஒழுங்குக்காட்டி சிரிக்கிறது
நான் செய்த புண்ணியம்

கொலை சிரிப்பைக்காட்டிலும்
கேலிச்சிரிப்பு கொடூரமானது

வேறு வழியே இல்லாமல்
கொஞ்சமாய் நான் செய்த
புண்ணியத்தையும்
கொன்று
என் பாவத்தின் பட்டியலை நீட்டுகிறேன்

பாவத்தின் பட்டியல் நீண்டதால்
என் கழுத்தை நெறிப்பதை விடுத்து
என் பாவங்கள்
மெதுவாய் என் கழுத்தை
கடிக்க தொடங்குகிறது......!!!!


எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (28-Jan-11, 11:38 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 414

மேலே