காதல் வலி

அன்பே,
உன் முகம் காணாத நாட்கள் - இப்போது
சகஜமாக.....................முடிகிறது...!!!
உன் கைகள் கோர்காத என் - பயணமும்
சீராக........................செல்கிறது...!!!
உன் இனிய குரல் கேட்காத - செவிகளும்
நன்றாக..................... கேட்கிறது...!!!
உன் பிரிவு வாட்டிய போதும் - உண்ண,
உறங்க...................மறக்கவில்லை...!!!
உன்னை மறந்து வேறோர் வாழ்வை - நானும்
இங்கே..................துவங்கவில்லை...!!!
நீயில்லாமல் என் இதயமும் - இன்று
செயல்படாமல்......இருக்கவில்லை...!!!
ஆனாலும் அந்த தருணம்...,
வாழ்க்கை மெல்ல கசக்கும்...!
நேரம் நகர மறுக்கும்...!
மூளையில் ரசாயன மாற்றம்...!
உடற்ட்கூருகளின் வேலைநிறுத்தம்...!
துடிக்கும் இதயமும் இடையே,
மரணத்திற்கு ஒத்திகை பார்க்கும்...!
விளைவில்லா சித்திரவதைதான்...!
நான் உன்னை நினைக்கும் தருணம்...!
காதல் வலி என்பது இதுதானோ.....?