ஆறுதல்

நான் பிறந்த போது உடலில் வலி இருந்தாலும்
உள்ளத்தில் மகிழ்விருந்தது என் தாய்க்கு ,
எனக்கு இந்த உலகம் புதிதாய் இருந்தது .
நான் வள்ர்ந்தபோது என்னை யாரும் வெறுக்கவில்லை
எனக்கு அந்த உலகம் பழகிவிட்டது
நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபோது
என்னை பாராட்டினார்கள்
என் பெற்றோரும் மற்றவரும் உடன் இருந்தனர்
என்னை ஒரு நோய் தாக்கியது
அப்போது சிலர் பாராட்டினார்கள்
சிலர் தூற்றினார்கள்
என் பெற்றோர் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
என் நண்பன் ஊக்கம் அளித்தான்.
நான் மீண்டும் புது உலக வாழ்வாகிய
பொறியியல் கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைத்தேன்
அது எனக்கு மரண அடியாக என் தலையில் விழுந்தது..
என்னை அனைவரும் தூற்றினார்கள்.
சூழ்நிலை காரணமாக படிக்காததால் என் பெற்றோரும்
நேரடியாக என்மேல் வெறுப்பைக்காட்டாமல்
மறைமுகமாகப் புலம்புகின்றனர்.
இருந்த நல்ல நண்பனையும் சுய நலத்திற்காக
பிரிந்து வேறு கல்லூரியில் படிப்பதற்கு மனம் சிலிர்த்தது அன்று
ஆனால் இன்று உண்மையான நண்பர்கள்
யாரும் இல்லையே என மனம் வருந்துகிறது.
இன்று யாருக்கும் என்னை பிடிக்கவில்லை.
என்னுடைய ஏக்கம் எல்லாம் எனக்கு ஆறுதல் சொல்ல
ஊக்கப்படுத்த யாராவது வருவார்களா என்பதே

எழுதியவர் : மனதின் மைந்தன் (10-Dec-13, 8:07 am)
Tanglish : aaruthal
பார்வை : 96

மேலே