அவள் மடியில்

காதல் கொண்டேன் அவள் மீது
கனவினில் மிதக்குது என் மனது....

நிஜத்தை மறந்தது என் வயது
அவளை சுற்றியே என் நினைவு...

இரவுக்கு அழகு வெண்ணிலவு
அதையும் வென்றது அவள் அழகு....

என் இதயம் தொலைத்தேன் அவள் அழகில்
வாழத்துடிக்கிறேன் அவள் அருகில்....

வேண்டும் அவள் என் மணவறையில்
இல்லை
மரணம் வேண்டும் அவள் மடியில்...

எழுதியவர் : vignesh (10-Dec-13, 9:12 pm)
Tanglish : aval madiyil
பார்வை : 565

மேலே