மறந்த்தது பாரதியை அல்ல பாரதத்தை

எங்கோ ஒருவன் உயர்ந்து கொண்டுயிருக்கிறான்
அவனை நாம் உயர்வாக போற்றுகிறோம்

இங்கே ஒருவன் நம் உயர்வுக்காக
பாடுபட்டு கொண்டுயிருக்கிறான்
அவனை நாம் பைத்தியக்காரன் என்கிறோம்

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மரியாதைக் கூட
நட்டியவாதிக்கு கிடைப்பதில்லை
என்பதுதான் உண்மை

இது எப்படி இருக்கிறது என்று பார்த்தல்,

நம் பிள்ளையின் பிறந்தநாளை
புதுக்கலாமாக கொண்டாட தெரிந்த நமக்கு
தன்னை பெற்ற அன்னை அவள் இறக்கும் நாளை
மறந்து விட்டு செல்கிறோம் என்பதுபோல் இருக்கிறது....

தாயும் ஒன்றுதான் தாய்நாடும் ஒன்றுதான்
என்று பேச தெரிந்த நமக்கு
தாயை மறப்பதில்லை,
ஏன் தாய்நாட்டை காத்த மகான்களை மட்டும்
மறந்து விட்டு செல்கிறோம் ...,

இக்கரிகாலத்தில் தாயையே தெருவில்
விட்டு செல்கிறோம்
தாய்நாட்டை காத்த மகான்களுக்கு
சொல்லவா வேண்டும்

பிச்சையிட்டு
பிட்சைகார்களை வளர்த்து விட்டு செல்கிறோம்
நாம் வளர்வதற்கு
மற்றவர்களை அடிமையாக்கி கொண்டுயிக்கிறோம்

இந்த மக்களே இப்படிதான் என்று சொல்பவர்களுக்கு
இந்த மக்களில் நாமும் ஒருவன்தான் என்பது
தெரியவில்லை

"ஏழையின் வாழ்வு அடிமையாற்று பாப்பா,
இளைஞனின் பாதை வேலையற்று திரிந்துகொண்டுயிருக்கிறது பாப்பா,
சமுகம் போதையில் சென்றுகொண்டுயிக்கிறது
பாப்பா ,
மகான்களை மறந்து விட்டது பாப்பா ,
வாழ்க்கை நாடகமாக போயிற்று பாப்பா "


ஏமாந்து கொண்டுயிருக்கும் மக்கள் இருக்கும்வரை
ஏமாத்தும் கூட்டம் ஒன்று இருந்துகொண்டுதான் இருக்கும்

எழுதியவர் : காந்தி . (12-Dec-13, 11:48 am)
பார்வை : 117

மேலே