உண்மைக்கு என்றும் தோல்வி இல்லை

பெற்றோரின் ஒரே மகளாக இருந்தாள் கல்யாணி. நன்கு படித்தவள். படிப்பிற்கு மேலாக அதிகம் கடவுள் நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
பள்ளி படிப்பை வெற்றியாக முடித்த அவளுக்கு, மேற்படிப்பை முடித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஒரே ஆசை.
சொன்னாள் தனது பெற்றோரிடம்.

பெற்றோருக்கு அவளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை... ஆனால், குடும்ப வருமானம் அவளை படிக்க வைக்கும் அளவுக்கு இல்லை...

ஒரு வழியாக கஷ்டப்பட்டு அவளை விமான பணிபெண்ணாக படிக்க வைத்தார் அவள் தந்தை....

நன்றாக படித்த அவள், அங்கும் முதல் மாணவியாக வந்தாள் ....

ஒரு நாள்........

==============================================

அவள் படித்த கல்லூரிக்கு நேர்முக தேர்வு நடத்த தலைசிறந்த நிறுவனம் வந்தது. அதில் இவளும் பங்கு கொண்டாள்...

அவளோடு இருந்த மற்ற பெண்கள் அனைவரும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

அவளோ,
தனது நிலைமைக்கு தகுந்தாற்போல, ஒரு புடவை அணிந்திருந்தாள்.

===============================================

கேட்கப்பட்டது கேள்விகள் ....

கல்யாணியிடம் கேட்டனர்,
நீங்கள் மதுபானம் அருந்துவீர்களா என்று...
அவள் சொன்னாள் : இல்லை

நீங்கள் புகை பிடிப்பீர்களா என்று....
மறுபடியும் கல்யாணி சொன்னாள் : இல்லை.....

எல்லாரிடமும் இதை போன்றே கேட்கப்பட்டது.

கல்யாணியை தவிர அனைவரும் ஆம் என்று பதில் அளித்தனர்....

===============================================

கல்யாணி தனது மனதில் நினைத்தாள் : நமக்கு கண்டிப்பாக வேலை கிடைக்காது. எல்லாரும் ஆம் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் மட்டும் இல்லை என்று சொல்லி இருக்கிறேனே என்று....

இறுதியாக எல்லாரிடமும் கேள்விகள் கேட்டு முடிக்க பட்டது.

கலந்து கொண்ட அனைவரில் மொத்தம் 10 பேர் மட்டுமே தெரிந்தெடுக்க படுவார்கள் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.....

எல்லாருடைய கண்களும் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தன ....

===============================================

அந்த 10 பேரில் முதல் பெயரை வாசித்தார்கள் ....

அது வேறு யாரும் இல்லை .... முதல் பெயர் கல்யாணி தான் ....

நேர்முக தேர்வு நடத்தியவர், கல்யாணி மட்டும் தான் உண்மையை சொன்னாள். மற்ற அனைவரும் வேலை கிடைக்க வேண்டும் என்று , தாங்கள் செய்யாததை செய்தோம் என்று பொய் சொன்னார்கள் .....

ஆகவே நாங்கள் கல்யாணிக்கு 1,00,000 ரூபாய் மாதம் சம்பளம் வழங்குகிறோம் என்று சொன்னார்கள் ...

கல்யாணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .... மகிழ்ச்சியாக பணியில் சேர்ந்து பெரும் புகழோடு வாழ்ந்தாள் .....

==============================================

கருத்து:
உண்மைக்கு என்றும் தோல்வி இல்லை ....

எழுதியவர் : Beni (12-Dec-13, 7:06 pm)
பார்வை : 659

சிறந்த கட்டுரைகள்

மேலே