இனி எல்லாம் இயற்கையே

" இனி எல்லாம் இயற்கையே..!! "
இயற்கையும் செயற்கையும்
சேருமெழில் ஓவியமே!
நவீனமுடன் இயற்கையும்
நல்லிணக்கம் ஆகிடுமே!
மனதிற்கு இனிமை!
கண்ணுக்குக் குளுமை!
உணர்வுக்கு மென்மை!
உலகிற்கு மேன்மை!
இனியெங்கும் புவியில்
இயற்கை செழிக்கட்டும்!
இயற்கையின் தாயன்பில்
இயல்பாய் வளர்ந்திடுவோம்!