தொட்டில் பழக்கம்

தொட்டில் வந்த பழக்கமடா!
சுடு காடு மட்டுமடா!!
நல்லதானால் நல்லதடா!--அது
பொல்லாதெனில் தொல்லையடா!

பழகும் வழி திறமையடா!
பழகுவதே பதியுமடா!
பழகுவதே பாடமடா!--அந்தப்
பாடம்தானே படிப்பதடா!

நல்லவனின் பழக்கமடா!
நல்லதொரு பாடமடா!
பொல்லாதான் பழக்கமடா!--உன்னை
புதைக்குழிக்கு தள்ளுமடா!

அஞ்சதிலே வளைஞ் சதடா!
ஐம்பதிலே ஒடியாதடா!
பிஞ்சினிலே பழுத்த தடா!--கெட்டு
நஞ்சாக்கும் நாசமடா!

சோகம் ஒரு சோதனையடா!
சோகம் மாற்றத் தூண்டுமடா!
தேடும் தீய மயக்கமடா!--தொட்டுத்
தீரத் தீரத் தேடுமடா!

நல்ல குணம் கெடுவதடா!
நாழிகையும் அதிகமடா!
கெட்ட மனம் தேறாதடா!--செத்துச்
சுட்ட பின்னும் நாறுமடா!

தொட்டில் குணம் நல்லததை
விட்டிடாமல் தொடர்ந் திடடா!
கெட்டதென உணர்ந்தாலதை -நீயும்
விட்டுவிட முயல்வாயடா!

தீய வழி போகாதேடா!
தீயோர் முகம் பாராதேடா!
மாய வலையில் வீழாதேடா!--நல்ல
நேயங்கெட்டுத் தாழாதேடா !

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (13-Dec-13, 9:02 pm)
பார்வை : 165

மேலே