கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணாம்
எழுவதாம் கல்யாணாம்
எ ண் பதாம் கல்யாணாம்
தம்பதியர்கள் முதுமையில்
கல்யாணம் ஏன் என்றதற்கு
பிறர் பார்த்து மகிழ்வதற்கு
பீடை கழிவதற்கு
பிளளை கள் கட்டாயத்திற்கு
ஆயுசு விருத்திக்கு
என்று பல காரணங்கள்
என்று பல் காரியங்கள்
என்று பல ஆசைகள்
என்று அடுக்கிக்கொண்டே போவது
இன்று நடை முறை .
அறுபதுக்கு மேல் வாழ ஆசை
எழுபதுக்கு பின் ஓட ஆசை
என்பதுக்கு மேல் குதிக்க ஆசை
நூறுக்கு மேல் கும்மாளமிட ஆசை
என்று பல குரல்கள் ஒலிக்க
பல பேச்சுக்கள் எழ
பலர் கேள்விகள் எழுப்ப
இதுவும் இன்று நடப்பில் தெரிய
எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்
நினைக்காமல் இருக்க முடியவில்லை
எதற்கு இவ்வளவு செலவுகள்
நினைத்து பார்க்க முடியவில்லை
அவரவர் விருப்பங்கள்
அவரவர் வாழ்விலே வெளிப்பட
யாரும் யாரைப் பற்றி பேச உரிமை இல்லை
என்ற கருத்தோடு ஒதுங்க வேண்டும்.
இந் நோக்கோடு செயல் பட்டால்
நல்லது என்று தோன்றுகிறது .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Dec-13, 10:26 am)
பார்வை : 527

மேலே