சாதாரண பெண்ணாய்

காகிதம் இல்லாமல்
ஓவியம் வரைகிறாய்
உன் விழிகளால் ..............!

பூக்கள் இல்லாமல்
புன்னகை சிந்துகிறாய்
உன் இதழ்களால் ...............!

மேகம் இல்லாமல்
மழையை தருகிறாய்
உன் பார்வையால் ...............!

வார்த்தைகள் இல்லாமல்
கவிதைகள் பேசுகிறாய்
உன் மௌனத்தால் ...........!

தென்றல் இல்லாமல்
வாசம் விசுகிறாய்
உன் சுவாசத்தால்...........!

வாசல் இல்லாமல்
கோலம் போடுகிறாய்
உன் வெட்கத்தால்.........!

நிலவே .......!
எத்தனையோ அழகை
உன்னுள் ஒழித்து கொண்டு
ஏன் நீயும் நடமடுகிறாய்
ஒரு சாதாரண பெண்ணாய் ...............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (16-Dec-13, 10:45 am)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : SATHARANA pennaay
பார்வை : 94

மேலே