அம்புலியே

அவனி எங்கும் பவனிவரும்
அல்லி முகம் மலரச்செய்யும்
அன்னை மடியாம் நீலவானில்
அழகாக தவழ்ந்து வரும் ....!!

பால் வண்ணம் கொண்டிருக்கும்
பால் வீதியில் நடைபழகும்
முகில் திரைக்குள் முகம்மறைத்து
முழுமதி ஒளிந்து விளையாடும் ....!!

தேய்ந்து வளரும் வாடிக்கைதான்
பாய்ந்து ஓடும் வேடிக்கைதான்
காய்ந்து ஒளிர்வது இரவில்தான்
தோய்ந்து போவது கவியில்தான் ....!!

திங்களுக் கோர்நாள் ஓய்வெதற்கோ
தங்கக் காதலனைக் காண்பதற்கோ
தண்ணிலவுக் கென்று திருமணமோ
தகுந்த கண்ணாளன் யாரவனோ .....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Dec-13, 11:00 am)
பார்வை : 101

மேலே