ஓர் குளிர் இரவில்

தாயின் கதகதப்பைப் போல்
இது இதமே தருகிறது ,
என்று நினைத்து மகிழ்ந்த அச்சிறு
கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள்
அறியவில்லை !
அதன் சிற்றிறகுகள் கருகி
இறக்கும் வரை !..
அது இடி மின்னலால் மரம்
தீப்பற்றி எரிந்த வெப்பமென்று!..........