வண்ணமே எண்ணமாய்

அனைத்து வண்ண ரோஜாக்களும்
இங்கு கிடைக்கும் என்ற
அறிவிப்பின் தலையில்
அணிவகுத்து அழகு சேர்த்தன
பேரெழில் ரோஜாக்கள் !..
தங்கள் தலை கிள்ளப்பட்டது
என்றறிந்தபோதும்
அணையும் விளக்கின்
பிரகாச தீபச் சுடரொளியுடன்..

எழுதியவர் : கார்த்திகா AK (16-Dec-13, 6:17 pm)
பார்வை : 114

மேலே