பொங்கல்

தை திங்களில்
கதிரவனுக்கு
நன்றி சொல்ல
உழவனுக்கு
கிடைத்த வரம்
நம் தமிழருக்கு அது அறம்.
இன்றைய சுடான பொங்கல்.
பெயரும்
பண்டிகையும்
தனி அடையாளம் தமிழர்க்கு -அது
தவறி நூற்றாண்டு தாண்டியது.
இன்னுமும்
காலண்டரின் பின்புறம்
இந்துக்கள் பண்டிகையில் மட்டும்
பொங்கல்-அது
அச்சு வெல்லமில்லாத
அச்சு பிழையான பொங்கல் .
கதிர் சாய்ந்த நிலத்தில்
கட்டிய வீடு நிமிர்ந்து நிற்க
தண்ணீர் மின்சாரமில்லாத
கண்ணீர் பொங்கல் உழவனுக்கு.
இந்த செலவை
எதில் சரிகட்ட என்று
பட்ஜெட் போடும்
அளவானபொங்கல்
நடுத்தர குடும்பத்திற்கு.
எதையும்
வாங்க முடியாமல்
இரண்டு துண்டு
கரும்புடன்
கலை கட்டும்
பொங்கல் ஏழைக்கு.
ஓணத்தை போல
ஒற்றுமை இல்லை
பொங்கலில் என்ற
ஆதங்க பொங்கல் எனக்கு.