தூரத்துப் பச்சைகள்

கோலமிட்ட குடிசையது
கோவிலாகத் தோன்றுமடா...!

மாளிகையில் இருளிருந்தால்
மனம்விரும்ப இயலுமாடா ?...

இல்லாததின் சுகத்தைவிட
இருப்பதில் அதிகம் இருக்குதடா

இதை நீ புரிந்து கொண்டால்
இன்னல் வாழ்வில் இல்லையடா...!

சரி.......

எது இருப்பது ?
எது இல்லாதது ?

நிலையில்லாமையை தவிர்க்கும் மனம்
இருப்பது

நிலையில்லாமையை விரும்பும் மனம்
இல்லாதது

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Dec-13, 3:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

மேலே