ஆனை முகனே----ஸ்ரீ கணேசா---

கர்வம் உடைந்தால் இனிமைஎன்ற
கருத்திற்காய் விடலை போட்டேன்

கண்ணீரும் இனிமையோ ? தேங்
காயே நின் காயம் உடைந்ததோ ?!

செடிக்கும் உயிர் இருக்குமாயின் - இந்தச்
சித்ரவதையால் அது வலித்திருக்குமே...!

ஆனை முகரே சொல்லுமையா இது
அதிகப் பிரசங்க சிந்தனையோ ?!

அருள் வழங்க வேண்டுகிறேன்
அங்கே உடைந்த தேங்காய் முக்தி பெறட்டும்...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Dec-13, 4:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே