மரத்தின் மனித நேயம்

மனம் விட்டுப் பேசிப் பார்த்தேன்
மரத்தோடு நான் மெதுவாய்....

நிழல் அதன் மொழி என்று என்
நிம்மதிக்குப் புரிந்தது.....!

பார்க்கும் விழியில் கருணையிருந்தால்
பரிமாற பாஷை எதற்கு ?

மொழிதாண்டிய உணர்வு அது
மொத்தமாய் மனித நேயம்...!

ஊஞ்சலாட உதவும் விழுதின்
உள்ளத்திலும் மனித நேயம்.....

உருண்டு நான் விழுந்து விட்டால்
உள் காயத்துக்கு தன் இலையைச் சாறாக்கி...

உச்சிமோந்தே கண்ணீர் மல்குவதாய்
மழைத்துளிகள் சொட்டும் மரக் கிளையில்

மனித நேயம்.....!!!
மனித நேயம்.....!!!
மனித நேயம்.....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Dec-13, 4:45 am)
பார்வை : 287

மேலே