தஞ்சம்,

தஞ்சம்.,


மனைவிகள் தஞ்சம்
கணவன்மார்களிடம்.,
குழந்தைகள் தஞ்சம்
பெற்றோரிடம்.,
பெற்றோர்கள் தஞ்சம்
ஆண்பிள்ளைகளிடம்.,
மாணவர்கள் தஞ்சம்
ஆசிரியரிடம்.,
நோயாளிகள் தஞ்சம்
மருத்துவரிடம்.,
வறுமையாளர்கள் தஞ்சம்
பணியாளர்களிடம்.,
இப்படி,
ஒவ்வொருவரும் பலரிடம்
தஞ்சம் அடைந்திருக்கும் போது,
நான்,
ஏன் உன்னிடம் மட்டுமே
தஞ்சம் அடைந்தேன்!
உன் தூய்மையான
மனத்தினாலா!
கள்ளம் கபடமற்ற
எண்ணத்தினாலா!
அல்லது,
கண்கள் கலங்குமளவு
நீ கொடுக்கும் பாசத்தினாலா!

இவற்றை ஆராயும் போது.,
என் மனம் இவற்றை எல்லாம்
விட ஒன்றை மட்டும் தான்
உன்னிடம் நோக்கி தஞ்சம்
அடைந்து இருக்கிறது!
அதுதான்,
உன் குழந்தைதனமான,
அன்பு!

எழுதியவர் : elakkiyam (17-Dec-13, 12:23 pm)
பார்வை : 115

மேலே