காதலென்னும் சோலையினில்24
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தாள் கவிதா...
ஏன்! என்னை ஏமாற்றிவிட்டீர்கள் நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று அவள் கேட்க, ராஜாவோ நிதானமாக பதில் கூறுகிறான் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் அதான் எல்லாம் இப்படி ஆகி போச்சே இனி நீ உன் வழியில செல் நான் என் இந்த வாழ்க்கையிலேயே செல்கிறேன் என்றான்.........
இவனின் இந்த பதிலை கேட்ட அவளோ அழுது விட்டாள் அப்போ ஏன் என்னை திருமணம் செய்கின்றேன் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி இவ்ளோ நாள் ஏங்க வச்சிட்டீங்க முதலிலேயே எவளோ ஒரு பிச்சைக்காரியை பார்ப்பேன் என்று சொல்லி இருந்தால் நான் இன்னிக்கு ஒரு கோடீஸ்வரனை திருமணம் செய்து சந்தோஷமாக இருந்திருப்பேன் இல்ல என் தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுதோ..........
அவன் எதுவும் பேசாமல் நின்றான்.............
அவள் விடுவதாக இல்லை நீங்கள் வேறு திருமணம் செய்தது கூட பரவாஇல்லை ஒரு நல்ல பொண்ணா பார்த்து பண்ணிருக்கலாமே, என் இப்படி இருக்கிங்க என்று மறுபடியும் கவிதாவையே மட்டம் தட்டி பேசினாள்...........
அவன் உடனே என் விதி இப்படி ஆகி விட்டது நீ ஒரு நல்ல வாழ்வை தேர்ந்தெடுத்துக்கொள் என்றான்.
பதிலுக்கு அவள் இனியும் ஒன்றும் கெட்டு போகவில்லை இந்த வீட்டிற்குள் வந்திருப்பவளை ஒரு பெருந்தொகையை கொடுத்து அனுப்பி விடுங்கள் என்று சொன்னாள்..........
கவிதா அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அங்கிருந்து கிளம்ப நினைக்கும் வேளையில்தான் அதை கவனித்தாள் தோள்பட்டையில் அதே அடையாளம் அன்னிக்கு வீட்டிற்குள் இருந்து அத்தையும் அவளும் பேசினதைஎல்லாம் கேட்டு விட்டு சென்றவள் அவள் முகத்தை இப்பவும் பார்க்க முடியவில்லை ஆக அன்னிக்கும் இவள் ராஜாவை தான் பார்க்க வந்திருக்கிறாள் என்பது உறுதியானது...................
கண்நிறைய கண்ணீரோடு திரும்பிய கவிதாவை பின்பக்கமாக நின்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் அவளும் அவர்கள் இருவரின் பேச்சையும் கவிதாவின் முகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தாள்...............இனி இவள் என்ன செய்ய போகிறாளோ????????????????? என்ற யோசனையில் கவி?