என் ஜீவன் போகும் வரை உனக்காக 555
அழகே...
என் இதயத்துடிப்பின் ஓசையை
உன்னிடம் சொன்னேன்...
நீயோ எரித்துவிடும்
பார்வையில்...
நான் சொல்லிய
சூழ்நிலை தவறா...
இல்லை நான்
சொல்லியதே தவறா...
உன்னை நான்
ஏன் நேசித்தேன்...
நீ எனக்குள்
எப்படி வந்தாய்...
தெரியவில்லையடி
இன்றுவரை...
எனக்காக துடித்த
என் இதயதினைவிட...
உன்னை அதிகம்
நேசிகிறேனடி...
எனக்காக துடித்த
என் இதயத்தின் ஓசை...
இனி உனக்காக
மட்டும் தானடி...
என் ஜீவன் ஓயும்
வரை...
உனக்காக மட்டுமே
வாழுமடி...
என் சுவாசமும்
என் இதய துடிப்பும்...
காத்திருகுமடி என்
ஜீவன் போகும்...
இறுதி வினாடி வரை
இமை மூடாமல்.....

