உன்னை தொலைவில் இருந்து ரசிக்கும் வின்மீனடி நான் 555
அடிபெண்ணே...
உன்னை என்
உறவென நினைத்தேன்...
உன்னையே
தொடர்ந்தேன்...
நீ அவமானங்கள்
பல தந்த போதும்...
உன்னையே
தொடர்கிறேன்...
என்மீது நீ வைத்த
பாசம் எல்லாம்...
வேஷம் என்கிராயடி...
உண்மை அன்பை நீ
உணர போவது எப்போது...
அழகாக பேச
தெரியவில்லையடி...
உன் மனம் கவர
என் உள்ளத்தின் வார்த்தைகளே...
உன்னிடம்
வார்த்தைகளாக...
உண்மை அன்பிற்கு
ஏங்க மட்டுமே தெரியுமடி...
ஏமாற்ற தெரியாதடி...
நீ எனக்கு தந்த வலியை
நான் தாங்கி கொள்வேனடி...
உன் நினைவுகளிலே
வாழ்ந்துவிடுவேனடி...
என்னை போல்
நீ யார் மீதும்...
அழகான பாசம்
வைத்துவிடாதே...
உன் உள்ளம்
தாங்காதடி மானே...
பூ போன்ற
உன் உள்ளம்...
என்னவளே உன்
நலம் விரும்புகிறேன் என்றுமே...
நான் தொலைவில்
இருந்தாலும்...
உனக்காக துடிபேனடி.....