வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்!

முழுநிலவை ஒத்திருக்கும்
அழகான என் மேன்மையே!
மற்றவர்கள் மெச்சிட
நடக்கும் என் மேதையே!
உணர்வுகளுக்கு மதிப்பு
கொடுக்கும் என் மெல்லினமே!
நற்குணங்களின் இருப்பிடமான
என் மானே!
அன்புக்கு இலக்கனமான
உரிமையான என் மதியே!
இந்த குணங்களுக்கு
உரிமையானவன்
நீ என்றால்!
இப்பொழுது ஏன்,
வானம் உன்
வசப்படாது!
ஆம், நிச்சயமாக
வானம் உன் கையில்!
போனது போகட்டும்,
வெல்வது நீயாகட்டும்!
இனி,
ஒவ்வொரு தொடக்கமும்
வெற்றியே!
வாழ்த்துக்கள்!

எழுதியவர் : elakkiyam (18-Dec-13, 3:11 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 59

மேலே