அழகிய அம்மா
என் தேகம் சிறை கண்டது உன் கருவறையில்...!
என் இதயம் துடிக்க வைத்தாய் உன் இதய துடிப்பில்..!
உன் இறை தின்று வன்முறை செய்தேன் துடித்தாய்..!
என் தொப்புள் கொடி அறுத்த அந்த மருத்துவனுக்கும் தெரியும் அறுத்தது என் மூச்சு கோடியை என்று...!
மனித இனத்தின் தாங்கும் சக்தியாம் 45...
என்னால் கண்டாய் 57...!
ஆண் பிள்ளை பெற்று கர்வத்தில் திகைத்தாய்...!
கலங்கினேன் உன் இதய துடிப்பை பிரிந்து...
பழக்கினாய் உன் நெஞ்சில் அணைத்து...!
மனம் தகர்ந்தேன் உன் அரவணைப்பில்...!
என் முகம் கண்டு மயிர் சிலிர்த்தாய்...!
படைத்தவன் பரமன் ஆயினும்...
அந்த பிரமனுக்கும் தாயுண்டு மறவாதே...!
பாலுட்டும் வேளையில் சங்கத்தமிழ் ஊட்டிய என் அன்னைக்கு சமர்ப்பணம்....!