ஓர் தேனியின் புலம்பல்

ஓர் தேனியின் புலம்பல்
-------------------------------------

கானகமெல்லாம் அலைந்து திரிந்து

வாசமிகு மலர்கள் பல நாடி நுகர்ந்து

தினம் தினம் சேர்த்து வைத்தோம்

நேர்த்தியான எமது மெழுகு கூட்டினிலே

தேன் எனும் எமது அமுத உணவினையே

ஐயகோ வஞ்சக மனிதர் சிலர்

இன்று மூட்டிய தீ கொண்டு

எம் கூட்டினை தாக்கினர்

என்னைசேர்ந்தோர் பலரை மாய்த்தபின்

கொடியோர் ஈவிரக்கம் ஏதுமின்றி

தேன் மிகுந்த எம்வண்ணகூட்டினை

பிழிந்து சிதைத்து தேனை சூறை ஆடி

நேர்த்தியான பாத்திரத்தில் ஊற்றி

எடுத்து சென்றனரே கேட்பார் யாருமின்றி

தம் இன பெண்ணின் கற்பையே சூறையாடும் -

கயவர்களை ஒத்து

இவர்களையெல்லாம் தட்டி கேட்ட்க

இறைவா என்று நீ இங்கு வந்திடுவாய்?

எழுதியவர் : தமிழ்பித்தன் (19-Dec-13, 9:55 am)
பார்வை : 85

மேலே