அலைந்தான் எதற்காக

ஓடி ஓடி உழைத்தான்
நேரம் காலம் பார்க்காமல்
பணம் ஒன்றே குறியாக
நல்லியல்புகளை மறந்தான்
நல் வாரத்தைளை களைந்தான்
நன்னடத்தையை உதறினான்


வென்றான் ஈட்டுவதில்
எவ்வழி என்று பாராமல்
நல்வழி யில் சில கோடி
மற்ற வழியில் பல கோடி
பெருக்கினான் செல்வத்தை
தங்கமும் இடமும்மாக .


துவண்டான் வாழ்க்கையில்
இழந்தான் மனைவியை
தீராத நோய்க்கு
மீறின குழந்தைகளை
தாரை வாரத்தான்
தீய பழக்கங்களுக்கு .


மிஞ்சியது பணம் மட்டுமே
தனிஆளாகித் திரிந்தான்
மனதில் நிம்மதி இல்லை
பையில் பணம் வழிய
தளர்ந்தான் வெகுவாக
இறந்தான் யாருமில்லாமல் .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (19-Dec-13, 12:38 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 443

மேலே