கவி வணக்கம்

கண்டேன்! கலை வாணிதனை - அந்த
கவிஞன் கவிதையினுள்

சொன்னான்! பாரதி துன்பமில்லா
நிலையே சக்தி
கேட்டான்! பாரதி காணிநிலம்
தூணில் அழகிய நன்மாடங்களுடனே

கடந்தது கூறினான்
அவனொரு யோகி!
நிகழ்வது காட்டினான்
அவனொரு ஞானி!
வருவது கருதினான்
அவனொரு தீர்க்கதரிசி!

அவன் என் மனதின்
காவியத் தலைவன்
என்றும் அவன் கவிக்கடிமை - என்
சிந்தையில் பதிந்திட்டதால்.

எழுதியவர் : (19-Dec-13, 8:34 pm)
பார்வை : 74

மேலே