வள்ளுவத் துதி
ஈற்றடியில் கொஞ்சம் சுருக்கி
இகமதை தன்னுள் இருக்
நற்றமிழை நானிலத்தில் பெருக்கி
வாழ்ந்தாயே வள்ளுவா!
பள்ளுப்பாடி வள்ளுறை
வரச்செய்தாள் வாசுகி
வலமிருந்தோனே!
வாழிய நின்நற்றமிழ் பால்
வாழ் திருதமிழ் நாட்டில்
பிறந்ததினால் வாழ்கிறேனே!
தொற்றிய வறுமையில் நான்
வற்றிய போதெல்லாம்
பற்றிய நின்குறள் பால்
தேற்றினாய்!
வாழ வழி கொடுத்தாயே வள்ளுவா
நின் வாசகத்தால்
வாழும் தமிழ்பால்
வளம் காண்கிறேனே!