நான் யார்

நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை
நான் ஒரு மகள் இருவருக்கு
மனைவி யாக ஒருவருக்கு
தாயாக மூவருக்கு
சகோதிரியாக ஐவருக்கு
என்று புரிந்து கொண்டே.ன்.
ஆனால் உண்மையாக நான் யார் புரியவில்லை.

இத்தனை பேருக்கும் என்னை நினைவிருக்கமா?
நான் செய்தது நினைவில் தங்கியிருக்குமா?
என்னை மறந்து வாழ்ந்தேன்
என்னை அழித்து வாழ்ந்தேன்
என்னையே அளித்தேன் அவர்களுக்காக
இன்று நான் இல்லை அவர்கள் மனதில்
நான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது .

எனக்காக வாழப் போகிறேன்
மிஞ்சியுள்ள காலங்களில்
எனக்கு எனக்காகவே வாழ்வேன்
எழுதி கொண்டே படித்து
படித்துக் கொண்டே எழுதி
எழுது வதே இனி என் பணி
கண் மூடும் தருவாய் வரை

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (19-Dec-13, 11:13 pm)
Tanglish : naan yaar
பார்வை : 2881

மேலே