விடைபெறும் வாழ்த்துக்கள்

அழியா ஆழம் கொண்ட நம் காதல் கடல்
வற்றி போனது நீ ........
மணமேடை ஏறியபோது!!!

வீசிய தென்றலும் பேசிய வார்த்தைகளும்
ஓய்ந்து போனது நீ.....
அவனுடன் கைகோர்தபோது!!!!!

கடந்து வந்த பாதைகளும் சுமந்து நின்ற கனவுகளும்
கலைந்து போனது நீ ...
அவனுக்காக தலை குனிந்த போது !!!

உடைந்த என்னில் உன் நினைவுகள்!!!!!
புகுந்த மண்ணில் உன் கனவுகள்!!!!!

எழுதியவர் : vinoliyaa Ebinezer (18-Dec-13, 6:45 pm)
பார்வை : 346

மேலே