தாயின் ஏக்கம்
மகனே
நீ பத்து மாதம் இருக்க
என் கருவறை இருந்தது....
மழையில் நடுங்கிய எனக்கு,
பத்து நிமிடம் இருக்க
உன் வீட்டில் சிறு அறை கூடவா இல்லை...
என்று வாய் விட்டு கேட்க நினைக்கும்
இந்த காலத்தில்....
என் மகன் மழையில் நனைய கூடாது
என்று வேண்டி கொள்ளும் தாய்களே அதிகம்...
-அளவு கடந்த பாசத்தை அம்மாவால் மட்டுமே தர இயலும்...