அன்னை
அன்னையே...!
என்னவென்று எழுதுவேன்
உன் தியாகத்தை..........
பத்து திங்கள் சுமக்கையிலே
பத்தியங்கள் நீ இருந்தாய்
மரண படுக்கையிலே
மகன் என்னை பெற்றெடுத்தாய்
துயிலில் நன் அழுகையிலே - உன்
தூக்கத்தை நீ தொலைத்தாய்
தாலாட்டு பாடையிலே- நம்
தாய் மொழியை கற்று தந்தாய்
பால் ஊட்டி வளர்கையிலே- நம்
பண்பாட்டை கற்று தந்தாய்
நடை வண்டி பலகையிலே - நம்
நடைமுறையை கற்று தந்தாய்
பள்ளிக்கு செல்கையிலே -நல்ல
பகுத்தறிவை கற்று தந்தாய்
அன்னையே...!
என்னவென்று எழுதுவேன்
உன் தியாகத்தை..........
காகிதங்கள் போதாது உன்
காவியத்தை தீட்ட
வண்ண கவிதை தீட்டவும்
வார்த்தை என் வசமில்லை
அன்னைக்கு நிகர் வார்த்தை -தமிழ்
அகராதியில் தேடினேன்
அவளுக்கு நிகர் இல்லை என
அவ்வை என் கனவில் சொல்ல
கவிதை பிறக்கவில்லை – என்
கவியத் தாயை பற்றி
கவிதை படைக்காத வருத்தத்துடன்
உன் மகன்
என்னை ஈன்றெடுத்த அன்னைக்கு
இக்கவிதை சமர்ப்பணம்