உயிரினில் இருந்து கசிந்தது

என் உயிரினில் இருந்து கசிந்தது உன்னில் முழுமையாய் படிந்தது உயிரே..

என் உணர்வினில் உள் உறவினில் வேர் விட்ட விருட்சம் காதலானது அன்பே..

உன் அழகினில் கூந்தல் கொலைவினில் சிக்கித்தவிக்கிறேன் காதலால் பெண்ணே..

உன் விழி அழகிலே விசை உள்ளது என்னை ஈர்த்ததும் இமைகள் சுமையானது கண்ணே..

இரவோடும் பகலோடும் இரையாகும் இவன்
கனவுகள் கடைசி வரை கலையாது காதலி..

உன் பொன் மார்பு மீது என் தலை சாய்த்து உன் வாசனை நான் நுகர்ந்து என் காதலை உன்னில் புதைக்கணும் என் மலரே..

உன் இதயம் சுமக்கும் காதலன் நான் ஆகவே என் ஆயுளையும் பரிசாகவே படைப்பேனடி அழகி..

என் விம்பம் நீ இன்றி போகாது உன் நிழல் இன்றி வாழாது வடிவே..

என் அகராதி தொலைத்த அன்னையையும் அவள் அன்பையும் உன்னில் நான் காண வேண்டும் கண்மணியே..

காதலியே கடைசி வரை நீ வேண்டும்..

உன் கணவன் நான் ஆக வேண்டும்..

உன் மூச்சோடு என் மூச்சு கலக்க வேண்டும்..

என் இறுதி மூச்சு உனக்கு ஒரு நொடி முன் பிரிய வேண்டும்..

மீண்டுமொரு பிறப்பு இருந்தால் நான் நீ ஆக வேண்டும் நீ நான் ஆக வேண்டும் இன்னும் காதலிக்க...

என்னவளுக்காக பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (19-Dec-13, 12:16 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 68

மேலே