அன்பு என்பது எது

மண்ணில் உள்ள உயிர்களுக்குள்ளே
மகத்துவம் செய்வது அன்பு
பகைமை மறந்து நெருக்கம் கொள்ளும்
தனித்துவம் நிறைந்தது அன்பு ...........

துன்பம் வந்த எவர்க்கும்
நல் தோழனாவது அன்பு
தெம்பாய் கூறும் வார்த்தைகளாலே
அவர்க்கு தூணாய் இருப்பது அன்பு .......

தோள் திமிரிடும் பகமை தவிர்த்து
தோள்கொடுப்பது அன்பு
தேள் போன்ற வார்த்தை தவிர்த்து
தேன் சொட்டவைப்பது அன்பு ......

அகில உலகை வென்றிடும் மந்திரம்
அதுதானே அன்பு
அன்னை தெரசா காந்தியை போன்றோர்
அனுதினம் மதித்தது அன்பு .......

வெட்டும் கத்தியும் வெடிக்கும் குண்டையும்
வென்றிடும் வார்த்தை அன்பு
விசனம் பிடித்த எவரது மனதிற்கும்
தெம்பு கொடுத்திடும் அன்பு ......

மொழிகள் பலது இருந்தபோதிலும்
நம் விழியில் தெரிவது அன்பு
தன கருணை என்னும் பார்வையினாலே
பல கலவரம் தடுப்பது அன்பு ......

நீதியும் தர்மமும் நிலைத்திட நிற்கும்
அடிப்படை தத்துவம் அன்பு
நிம்மதி எவர்க்கும் தருகின்ற விடயம்
ஒன்றுதானே அன்பு .........

அன்னையின் முகத்தினில் முதலில் கண்ட
கருணைதானே அன்பு
அனைத்து உலக மக்கள் எவர்க்கும்
அவசியம் தேவை அன்பு ........

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Dec-13, 12:06 pm)
Tanglish : anbu enbathu ethu
பார்வை : 291

மேலே