கைநாட்டு கடவுள்கள்-இது சட்டத்தின் சாவுகணக்கு ருத்ரா

சட்டத்தின் ஓட்டை யெல்லாம் தன்
சட்டைப்பையின்
ஓட்டை யென்றார்கள். . .
. . . . . . . .. . . ருத்ரா

கண்டிக்கத்
துப்பில்லாது போன,
என் கணவாய் வழியே
ஓடுகின்ற
இரத்தப்புடையான்களே!

இரத்த விழுதுகள்
மரங்களாகி,
மரத்தின் கனிகள்
நரன்களாகி,
கனி விழும் நேரத்தில்
பிணங்களாகி,
புதைக்கப்பட்டது
விதைகள் என, முளைத்த கதைகள்
சொல்வது
கட்டுப்பிழைகளல்லவோ?

உருவபொம்மைக்கு
மட்டுமே
உயிர்கொடுத்து வந்த
எரிப்புகள்,
உயர்நீதி வழக்குகளில்
உறக்க நிலையில்
உயிர்நீத்து கிடக்கும்
உரிமை பறிப்புகளுக்கு
உயிர் கொடுத்திடுமா?

பரிணாமக்கோட்பாட்டில்
பலிநாளங்கள்
முளைத்ததா?
பலிநாளங்கள்
முளைத்து தான்
பாகப்பிரிவினையின்
பத்திரங்கள்
தழைத்ததா?

அரச புத்திரர்கள் முளைக்க முளைக்க
முத்திரைத்தாள்களில்
அத்துணை சாட்சிகளும்
ஆயுள் கைதிகள்
ஆனதா?

கைநாட்டு கடவுள்கள்
வந்து
கையெழுத்து
போட்டதாய் சாட்சியங்கள் சொன்னதே!
பின் ஏன்
தலை யெழுத்தை அழித்து விட்டு போனதை சாட்சியங்கள்
கொன்னது?

சட்டத்தின் சாவுகணக்கு
கணக்கெடுக்கப்பட்டது!
அதில்
செத்தவர்களின்
கணக்குகள்
நிலுவையில் வைக்கப்பட்டது!
இனி
சாக
இருப்பவர்களுக்கும்
இடம் ஒதுக்கப்பட்டது
இரண்டையும் சேர்த்து
இன்னொரு சட்டம்
இயற்றப்பட்டது!

இது தான் எங்கள் சட்டம்!
இது தான் எங்கள்
திட்டம்! என்று
கோசங்கள் எழுப்பப்பட்டது!

எழுதியவர் : ருத்ரா (20-Dec-13, 12:46 pm)
பார்வை : 92

மேலே