இறுதி கட்ட நாட்கள்

என் உடலின் சிறு அறையில்
கருவாய் நீ உருவானபோது
உன்னை உடலாய் உருமாற்றினேன்..

உன் உடல் உலகம் வந்து
வருடம் பல கடந்த பின்
நான் உன்னை பூமி சேர்த்ததற்காய்
ஆதரவற்றோர் இல்லம் சேர்த்தாய் ..

என் உடல் விட்டு உயிர் செல்லும் முன்
நீ அழைத்து செல்ல வருவாயென
வாசற் கதவுகளை நோக்கியபடியே
நகர்ந்துகொண்டிருக்கிறது
என் இறுதி கட்ட நாட்கள் ...

எழுதியவர் : அருண் (20-Dec-13, 1:52 pm)
Tanglish : iruthi katta nadkal
பார்வை : 144

மேலே