நெருங்காது உன்னை

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களிடம்
நட்பு பாராட்டு...
பொறாமை உன்னை நெருங்காது !

எப்பொழுதும் மகிழ்ச்சியில்லாமல் இருப்பவர்களிடம்
கருணையோடு இரு...
வருத்தம் உன்னை நெருங்காது !

போற்றத்தகுந்த சாதனையாளர்களைப் பார்த்து
மனதார சந்தோஷப் படு...
போட்டி உன்னை நெருங்காது !

உண்மையில்லாமல் இருப்பவர்களை
மனதளவில் உதாசினப்படுத்து...
சந்தேகம் உன்னை நெருங்காது !

பாவம் செய்பவர்களிடம்
நல்லதைச் சொல்லி, மறைந்து விடு...
குறைகூறும் குணம் உன்னை நெருங்காது !

எழுதியவர் : Karthika (20-Dec-13, 1:32 pm)
பார்வை : 79

மேலே