செயல்படு மனமே செயல்படுத்து மனமே

எத்தனை தோல்விகள் வந்திடும் என்று
புலம்பி நிற்காதே மனமே..
அத்தனையும் வெற்றியின் விளிம்பு தொட்டு
வீழ்ந்த காயங்களே மனமே..
அடுத்தமுறை வெற்றி கிட்டலாம் மனமே..

என்னிடம் என்ன இருக்கிறது என்று
எதையும்.. உதறித் தள்ளாதே மனமே..
எல்லாம் இருப்பவனும் வெல்வதில்லை
முயற்சி இன்றி மனமே..
கொஞ்சம் முயன்று பார் மனமே..

காண்பது ஒன்றே எல்லை என்று
திரும்பி விடாதே மனமே..
அறிவுக் கண் கொண்டு பார்த்து
அதையும் துளைத்துப் பார் மனமே..
உலகம்.. எல்லை இல்லாதது மனமே..

எதிர்ப்புகள் இங்கே அதிகம் என்று
ஒடுங்கி விடாதே மனமே..
எதிர்த்து நின்றால் தான்
சுயபலம் அறிவாய் மனமே..
எதுவும்.. சுலபமாய் கிடைப்பதில்லை மனமே..

உன்னை நீ துட்ச்சமாய் நினைக்கும் வரை
உலகமும் அப்படித்தான் நினைக்கும் மனமே..
உனக்கென்று ஒரு மேல் நிலையை
நீயே அமைத்துக் கொள் மனமே..
உலகமும் அதே நிலையில் உன்னைப் பார்த்திடும் மனமே..

எழுதியவர் : வெ கண்ணன் (20-Dec-13, 1:15 pm)
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே