அன்பே ஆருயிரே

விழலுக்கு யிறைத்த நீராக என் வாழ்வு அவள்
இல்லாமல் வீணாகிக் கொண்டிருந்தது - தாயின்
வற்றி உலர்ந்த மார்பை பசியால் சப்பிக்
கொண்டிருக்கும் குழ்ந்தையைப் போல் அவளை
நினைத்து என் மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது..!

அவள் இல்லாத வெற்றிடத்தை இருட்டில்
கண் இல்லாத குருடன் தடவிப் பார்ப்பதைப்போல்
அவள் வாழ்ந்த இடத்தை மனதில் தடவிப் பார்த்து
மனம் ஏங்கி அழுகிறது - இதயத்தில் இருந்து
இரத்தம் அவளுக்காய் வெளி நடப்பு செய்கிறது ...!

கண்ணே ...! கனி ரசமே .....! பொன்னே ....!
எனக்கு கிடைத்த பொக்கிஷமே ...................!
அல்லும் பகலும் அனுதினமும் நாம் வாழ்ந்த
வாழ்க்கையைப் போல் இப் பூமிதனில்
வாழ்ந்தவர் யார் உளர் ......! அந்த வானம் தான்
நம் காதல் மீது திருஷ்டி கண் போட்டதோ ....?
தினமும் வரும் சூரியன் தான் நம் வாழ்வைப்
பார்த்து ஏங்கி தவித்ததோ - இல்லை நம் மீது
வீசிய தென்றல் தான் ஊழியிடம் போய் ....
பொறாமையால் கோல் சொன்னதோ .......!

யார் செய்த சதி இது கண்ணே ....! நாம் பிரிந்த
இந்த நிலைக்கு காரணம் .....! நீ தூங்கிய இடத்தில்
நான் படுத்து புரளுகிறேன் ....தூக்கம் இல்லாமல் ...
உன் மடியைத் தேடி அழும் குழந்தையாக
அணைக்க தேடுகிறேன் ...! ஆதரவு இல்லாமல்
ஏங்கி ...........! ஏங்கி .........! அழுகிறேன் .....!

உன் சிரிப்பின் அலையை கேட்டு கேட்டு அதில்
உன் மலர் முகத்தை முகர்ந்து பார்க்க ஓடுகிறேன்
அன்பே நீ அந்த இருண்ட வீட்டில் இல்லாததை உணர்ந்து அந்த இருட்டில் என்னை
நானே அடித்துக் கொள்கிறேன் ... ! பாவி என்று
என்னை நானே திட்டிக் கொள்கிறேன் .....!

நீ கழற்றி போட்ட துணியில் அன்பே உன்
வாசத்தை முகர்கிறேன்.....! அதில் நாம் இருவரும்
ஆனந்தமாய் இருந்த நிமிடங்களை ஒவ்வொரு
யூகமாய் நினைத்து எந்தன் வாழ்கையை
கடத்துகிறேன்.......! சத்தியமாய் சொல்கிறேன்
அன்பே மனதறிந்து ஒருபோதும் உன்னை நான்
வெறுத்தது இல்லை ....நாம் இருவரும் ஒன்றாய் வாழும்போது கனவிலும் உன்னை பிரிந்தது இல்லை -பாழும் காலனுக்கே நம் அன்பு பொறுக்க வில்லை -கட்டிக் கரும்பே ...கற்பூர பெட்டகமே ....!
காலம் வரும் வரை உன்னிடம் நான் வர இனி
காத்திருக்க மாட்டேன் ....! கடுதியிலே வந்து
உன் மடிமீது தலை வைத்து படுத்து கனிவான
உன் இதழாலே ஒரு முத்தம் பெற துடிக்கிறேன்

காற்றினிலும் கடுதியாக உன்னில் தஞ்சம்
புக காலனோடு போராடுகிறேன் கண்ணே
நீ புகுந்த இதயத்தை உனக்காய் அல்லி மலரில்
அணைத்து எடுத்து வந்து அர்ப்பனமாய் தருகிறேன் ஆரணங்கே .....! அருந்தவமே .....! அன்னையாய் அணைத்து நல்ல தாரமாய் மடியில் தாங்கிய மாணிக்கமே ....! என் நலனுக்காய்
கரைத்துக் கொண்ட சந்தனமே ............!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (20-Dec-13, 8:59 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 530

மேலே