மௌனயுத்தம்
மன்றத்தில் மலர்ந்திட்ட
மல்லிகை
மனக் குன்றத்தில்
மணம் வீசுது!
மௌனத்தில் மொழி
பேசும் தாரகை
மன வானத்தில்
ஒளி வீசுது
சந்தித்த விழி மலர்
கனவினில் -காதல்
பந்திக்குப்
பாய் போடுது!
சிந்தித்து சிதறிய
கற்பனை-உயிர்ச்
சிறை மீட்டு
கவித் தீ மூட்டுது
வெண்மேகம் கால்
கொண்டு நடந்திட
மெழுகாகி மனம்
இறகாகுது.
விரல் கொண்டு
மீட்டாத தந்திகள்-வெறுங்
குரலோடு-நிதம்
போராடுது.

