நான் சாஜஹானல்ல
உனக்காய் நான் ஒன்றும்
தாஜ்மஹால் கட்டவில்லை
காரணம் நான் சாஜஹானை
போல சக்கரவர்த்தி இல்லை
என்றில்லை
நீ இறந்த பின் நான் மட்டும்
எப்படி உயிரோடு நடைபினமாகவா
நீ என் உயீர் அல்லவா உன்னை பிரிந்து
இந்த உடல் எப்படி தஞ்சம் கொள்ளும்
இப்பூமியில் உன் கல்லறையில் ஓர் இடம் கொடு
நானும் வந்து விடுகிறேன்
உனக்கு துணையாக
அல்ல
எனக்கு துணையாக
என்
தாயுமானவள் நீ
இருப்பாய் அல்லவா

