என் காதலை சொல்ல

தூரம் சென்று - என்னுள்
தூறல்கள் சிந்துகிறாய் !
அருகினில் வந்தமர்ந்து - கருவிழிகளால்
கைது செய்கிறாய் !
உணர்வற்று கிடந்தேன் - உயிர்கொடுத்தாய்
உன் இதயம் தந்து !
சக்தியற்று இருந்தேன் - சுவாசிக்க செய்தாய்
உன் சிநேகம் கொண்டு!
என் சிறு சிறு கனவுகளை ஆட்கொண்டாய்!
உன் துரு துரு பார்வையால்!
காணாமல் போகிறேன்
உன் கண்களை காணாத வேளையில்!
உறங்காமல் விழிக்கிறேன்
உன் கரம் கோர்க்காத தினத்தில்!
எங்கோ போகும் மேகம்
உன் வாசல் தேடும்!!
திசையறியாது தவிக்கும் பட்டம்
உன் வானம் சேரும்!
இளங்குயில் இசைக்கும் ராகம்
உன் காதினில் மெல்ல
என் காதல் சொல்லும் !

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Dec-13, 11:21 am)
Tanglish : en kaadhalai solla
பார்வை : 109

மேலே