எனக்காக வாழ்வை அர்ப்பணம் செய்தவள்

என் அழகு முகம் பார்க்க
தவமாய் தவமிருந்தவள்...
கருவிள் இருந்த எனக்காக
மாதம் பத்து கஷ்டப்பட்டவள்...
புரண்டு படுத்தாள் இறந்து போவேனென்று
நினைவு கூர்ந்து தூக்கமிழந்தவள்...
என் பசி போக்க
அவள் பசி மறந்து பாலூட்டி வளர்த்தவள்...
தான் படிக்கவில்லை என்றாலும்
என்னை படிக்க வைத்து அழகு பார்த்தவள்...
என்னை உங்களுக்கு வெளிச்சம் காட்டி
அவளோ வெளிச்சமின்றி இருப்பவள்...
அவளிடம் தான் கற்றுக்கொண்டேன்
அன்பென்றால் என்னவென்று
அதை சொன்னால் புரியாது
சொல்லியும் முடியாது...
உணர்ந்தால் மட்டுமே புரியும்
உணராதவர்க்கு கசப்பாக தெரியும்...
அனைவரிடமும் காண இயலாத அனபு
அவளிடம் அளவின்றி தெரியும்...
ஆம் அவள் தான் அம்மா,
அம்மா என்ற வார்த்தையே
ஆயிரம் கவி சொல்லும்
இந்த பிள்ளையின் கவி
உணர்வை தூண்டாவிட்டாலும்
சிலரின் உள்ளங்களை தொட்டுப்பார்க்கும்...
தனக்கென்று ஒரு நாளும் வாழாதவள்
தன் கடமையிலும் தவறாதாவள்...
காற்றிலே அவளது வாசனை...
கனவிலே அவளது சிந்தனை...
மனதிலே அவளது போதனை...
மறவாதே இந்த கண்மணி உன்னை..............

எழுதியவர் : இதயம் விஜய் (21-Dec-13, 11:37 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 241

மேலே