நல்லவன் யார்
நட்ட நடு வீதியிலே
நட்டானொருவன் மரமொன்று..
நட்டதையின்னொருவன்
பிடுங்கினான் ஊறென்று
நட்டவன் கலகக்காரன்
நலமொன்றும் எண்ணமில்லை.
பிடுங்கியவன் பேரறிவன்
பின்விளைவு சிந்தித்தான்.
நல்லது செய்வது போல்
பொல்லதை விதைப்பாரை
புரிந்து கொள்ள வேண்டுமே
புறந்தள்ள வேண்டுமே.
கயவரும் மனிதரே போல்
கலந்துதான் திரிகிறார்
காண்பதும் அரிதுதான்
கவனித்தால் கண்டிடலாம்...
கொ.பெ .பி.அய்யா.