நாணத்தில் அவள் சிவந்தாள்

நாணத்தில் அவள் சிவந்தாள்
நளினமாய் நானும் சிரித்தேன்

கோல மயிலோ ! கொத்தும் கிளியோ
என்று நான் சிந்திக்கும் முன்
வில் புருவம் காட்டி
எனை வீழ்த்தி விட்டாள்

உலக அதிசயம் நீயோ ! என்றேன்
உன்னுள் வாழும் அதிசயம் நானோ! என்றாள்
ஆம் என்றேன்
இருவர் கண்களும் சந்தித்த போது
கோடி மின்னல்கள்
எனது நரம்பு மண்டலத்தில்
நிலைகுலைந்து நின்றேன் நானும்

காதல் என்பது கனிரசமா! என்றேன்
இல்லை1 இல்லை !
கடைக்கண் வீச்சு1 என்றாள்
நானும் கவிழ்ந்து போனேன்

நீ யார் என்றேன்
தீண்டத்தகாத வாழவினள் என்றாள்
அப்படி நீயும் சொல்லலாமா ! என்றேன்

பிறப்பினால் சாதிகள் உண்டாமோ!
சாதிகள் உண்டென்றால்
தாழ்ந்த சாதி இரத்தம்
என்ன கருப்பாமோ
உயர் சாதியின் அனைத்து வகை இரத்தமும்
தாழ்ந்த சாதியிலும் காண்பது இயற்கையன்றோ!

நால்வருண முறை எதற்காமோ!
அன்று நிலபிரபுத்துவம் இன்று முதலாளித்துவம்
காப்பதற்கன்றோ!
காருண்யம் பேசும் கயவர்கள்
தெய்வ நிந்தனை செய்து மக்களை ஏய்த்து
இல்லம் நடத்துவது எதற்காமோ !
தாங்கள் வாழ்வதற்க்கன்றோ!

மனிதனுக்குள் சாதி உண்டாமோ !
மலர்கின்ற காதலுக்கு சாதி உண்டாமோ!
சதி செய்யும் சமுகத்தை அழிப்பதற்கு
சாதி வேண்டும் -உண்மையான
மனித சாதி வேண்டும்
மனிதரெல்லாம் ஒன்று என்றே
அதுவும் பாட வேண்டும்






!

எழுதியவர் : பொ,பொற்செழியன் (21-Dec-13, 10:02 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 87

மேலே