உலகத்தை தேடுபவனுக்கு

பயணம் முடிவுறுகிற தெருவில் நின்றும்
திரும்பிப் பார்க்கிறேன்
உங்கள் அபிமானங்களிலிருந்து
விடைபெற்றவனாய்

இனியான கணங்கள் எனக்கானதல்ல
வேறொருவரின் இடத்தை
எத்தனை காலத்திற்கு ஆக்கிரமிப்பது நான்


உங்கள் கனவுகளை சிதைத்ததை விடுத்தும்
சிரம் தாழ்த்துகிறேன்
நீங்கள் தேடிய உலகத்தை என்னால்
அடையாளப் படுத்த முடியவில்லை என்ற
வலியும்,வருத்தமும் இருக்கின்றன எனக்கும்

இங்கு நான் தேடிய உலகத்தையும்
காண முடிய இல்லையென்று
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இனி நீ ங்கள் தேடும் உலகமும்
நான் தேடியது போலவே இருக்கும்
ஏனனில்;
நாம் எல்லோரும் தேடிக்கொண்டிருப்பது
தொலையாத ஒரு உலகத்தை தான்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (22-Dec-13, 12:22 pm)
பார்வை : 216

மேலே