சரித்திர நாயகன்
நெல்சன் மண்டேலா.
நினக்கும் நெஞ்சங்களை
நனையவிட்டு
நெகிழவைத்த மாமனிதன்
உறவு பிறப்பால் மட்டுமல்ல
அணைப்பும் பிணைப்புமென
உணர்த்திய குணக்குன்று
இன்னும் வேணுமென்று
விரிவடையும் உள்ளம்
சாகும்வரை போதுமென்று
சொல்லாத அரசியலார் நடுவில்
குடிசையில் வாழ்ந்து
கோட்டைக்கு வந்தும்- போதுமென்று
குடிசையை நாடிய கோமகன்
தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்து
வடக்கிலிருந்து வந்தாண்டவரை
பணியவைத்து
வெள்ளையரை செதுக்கி
கருப்பின மக்களுக்கு
சுதந்திர சிலையாய் மாற்றி
வடிவமைத்த சிற்பி
இருபத்தேழு ஆண்டுகள்-சிறையில்
இளமையைத் தொலைத்தும்
மன்னிப்பு கோராத
வைராக்கிய பெருந்தலைவன்
வீழ்ச்சியில் கலக்கமோ
எழுச்சியில் மயக்கமோ
இல்லாத தெய்வமகன்
தர்மம்,சத்தியம்,நேர்மை
அத்தனையும் சேர்ந்த
மொத்த உருவெடுத்து
நதியாய் மாறினாய்-கருப்பின
மக்களின் நாகரீகம் வளர்ந்தது
உலகம் உள்ளமட்டும்-மக்கள்
உள்ளம் உன்னை மறக்காது
பிறந்ததும், மறைந்ததும் குலுவில்
ஒரு வரலாற்று சின்னம்
குலு மண்ணை முத்தமிட்டது
குலுங்கி அழுதது குலுமட்டுமல்ல
பூலோகமே புதைந்தது கண்ணீரில்
கருப்பினத்தை விழிக்கவைத்து
உறங்குகிறான் ஒரு சரித்திர நாயகன்