தங்கள் கருத்துக்களுக்காக

பெண் விடுதலை ! சில நாட்களுக்கு முன்பு வரை இந்த வார்த்தையில் தீராத ஐயம் ஒன்று எனக்கு இருந்தது.இருபத்தோராம் நூற்றாண்டில் பெண் விடுதலை என்ற சொல்லும் தேவையோ என்று...

சமத்துவ நாடு என்றான பின் ஆண் என்ன பெண் என்ன?ஆனால் இப்போது புரிகிறது அந்த வார்த்தையின் முக்கியத்துவம் என்னவென்று...

பாரதியின் வரிகளே வேதவாக்கு என்றிருந்தேன் ...பாரதி இன்று இருந்திருந்தால் நிச்சயமாக அதே வரிகளை எழுதி இருக்க மாட்டார் .புதுமைப்பெண் வேண்டாமென கண்டிப்பாக கூறி இருப்பார் .முகத்திரை பழக்கம் ஒழியாது இருந்திருக்கும் .பெண்மையின் அழகு பரிகசிக்கப் படாமல் போயிருக்கும் .

பெண்கல்வி எதற்கு ?வீட்டை விட்டு வெளியே வந்து மன்மதன்களால் கேலி செய்யப்படவா ?உரிமைகள் இருந்தும் ,இல்லை இல்லை, சிலரால் கொடுக்கப்பட்டும் இன்னும் தலை குனிந்தே நடப்பதற்கா ?

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்திருந்தால் இவை எல்லாம் இல்லாமல் இருந்திருக்குமோ ?சிறு சிறு ஏக்கங்கள் கூட சில மணித்துளிகளில் மறந்திருக்குமோ ?நினைத்து நினைத்து வெளிப்படையாய் அழக்கூட முடியாதத் துயரத்துடன் தலையணையை நனைத்தபடி இருட்டில் ...



##யுவபாரதி##


[எனது ஐயங்களுக்கு தங்கள் கருத்துப் பதிவுகளால் தெளிவளியுங்கள் நண்பர்களே :( ]

எழுதியவர் : யுவபாரதி (22-Dec-13, 2:58 pm)
பார்வை : 855

சிறந்த கட்டுரைகள்

மேலே